1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu School Education Department Warns Staff: Fail to Clear Departmental Tests Within 5 Years or Lose Your Post

5 ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் பதவி பறிபோகும்! ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஷாக்!

பள்ளிக்கல்வித்துறை
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, பணியில் சேர்ந்த 5 ஆண்டுகளுக்குள் துறைத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத ஊழியர்களின் தகுதிகாண் பருவத்தை  முடிவுக்கு கொண்டு வரவும், அவர்களது பதவியை பறிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மற்றும் பிற துறைகளிலிருந்து ஈர்க்கப்பட்டு பள்ளிக்கல்வி துறையில் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்களாக நியமனம் செய்யப்பட்ட பலர், தகுதிகாண் பருவம் முடிந்தும் இன்னும் துறைத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். இது தொடர்பாக 10 மாவட்டங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சட்டம் 2016, பிரிவு 31(4)-ன்படி, ஒரு அரசு ஊழியர் அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெற தவறினால், பதவி உயர்வு மூலம் வந்தவர்கள் பழைய பதவிக்கே திருப்பி அனுப்பப்படுவார்கள்; நேரடி நியமனம் மூலம் வந்தவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். இந்த விதியை உடனடியாக அமல்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஜேபி மோர்கன் சேஸ், பாங்க் ஆப் அமெரிக்காவுக்கு சிக்கல்.. பண பரிவர்த்தனைகளை செய்ய முடியாமல் தவிப்பு...