1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Airtel to be the fastest network pushing jio in 4th place

அதிவேக மொபைல் டேட்டா நெட்வொர்க் எது தெரியுமா...?

ஜியோ
இந்தியாவில் உள்ள 4ஜி நெட்வொர்க் சிக்னல் பற்றி ஆய்வு ஒன்றை  ஊக்லா என்னும் நிறுவனம் நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகள் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
இந்த ஆய்வு கடந்த ஆண்டின் மூன்று மற்றும் நான்காவது காலாண்டு காலத்திற்கான விவரங்களை அடிப்படையாக கொண்டு ஊக்லா நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது. ஆய்வு முடிவுகள் பின்வருமாறு, 
 
ஜியோ நாடு முழுக்க சுமார் 98.8% பகுதியில் 4ஜி கனெக்டிவிட்டி வழங்கி முதலிடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் 90.0% மற்றும் வோடபோன், ஐடியா நிறுவனங்கள் முறையே 84.6% மற்றும் 82.8% கனெக்டிவிட்டி வழங்குகின்றன. 
 
4ஜி நெட்வொர்க் கனெக்டிவிட்டிக்கும், இணைய வேகத்திற்கு அதிக வேறுபாடுகல் உள்ளன. அதன்படி நாட்டின் அதிவேக மொபைல் டேட்டா வழங்கிய நிறுவனமாக ஏர்டெல் உள்ளது. இரண்டு, மூன்று மற்றும் நான்காவது இடங்களை முறையே வோடபோன், ஐடியா மற்றும் ஜியோ நிறுவனக்கள் பிடித்துள்ளன. 
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் தனித்துப் போட்டியிடத் தயார் – தமிழிசை சீரியஸ் காமெடி…