திவாலாகிறது ரிலையன்ஸ்: அம்பானி குடும்பத்தில் பேரிடி
ரிலையன்ஸ் என்னும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய திருபாய் அம்பானியின் மறைவிற்கு பிறகு, ரிலையன்ஸ் நிறுவனம் இரண்டாக பிரிந்து திருபாய் அம்பானியின் மகன்களான முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானியின் கைகளுக்கு சென்றது.
இந்நிலையில் அம்பானி குடும்பத்தின் மேல் பேரிடி இறங்கியுள்ளது. அதாவது, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் (ஆர்காம்) நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கும் நடவடிக்கையை அந்நிறுவனம் துடங்கியுள்ளதாம்.
ஆர்காம் நிறுவனம் ரூ.46,000 கோடி அளவுக்குக் கடன் வைத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ஆர்காம் நிறுவனம் தன் சேவையை முற்றிலும் நிறுத்திக்கொண்டது. மேலும், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சொத்துகளை விற்று கடனை அடைக்க ஆர்காம் நிறுவனம் முடிவு செய்தது.
ஆனால், ரூ.25,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை விற்க முயன்றும் பல்வேறு காரணங்களால் விற்க முடியவில்லை. இந்த நிறுவனத்துக்கு 40 வங்கிகள், என பல நிறுவனங்களிடத்தில் கடன் உள்ளன.
ஆர்காம் சரிவிற்கு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. ஏனெனில் தொலைத்தொடர்ப்பு துறையில் ஜியோவின் போட்டி காரணமாக மற்ற நிறுவனங்கள் வருவாயையும் வாடிக்கையாளர்களையும் இழந்து வருவது குறிப்பிடத்தக்கது.