டிக்டாக்க தடை பண்ணிடுவீங்களா? செய்துதான் பாருங்களேன்!! மிரட்டும் கஸ்தூரி
டிக்டாக்கை தடைசெய்து தான் பாருங்களேன் என கஸ்தூரி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை முழுமையாக தற்போது டிக் டாக் வீடியோக்கள் ஆக்கரமிக்க ஆரம்பித்துள்ளன. அவற்றில் திறமையை வெளிக்காட்டும் வீடியோ என்பது மிகவும் குறைவானதே.
பெரும்பாலும் ஒன்றுக்கும் உதவாத ஆபாச வீடியோக்களே. தமிழ் பாடல்களுக்கு அல்லது தமிழ் படங்களில் வரும் ஆபாசக் காட்சிகளுக்கு வாயசைப்பதோதான் நிரம்பிக் கிடக்கிறது.
நேற்று சட்டப்பேரவையில் கலாச்சாரத்தை சீரழிக்கும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி கோரிக்கை விடுத்தார். இதற்கு அமைச்சர் மணிகண்டன் டிக் டாக்கை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு பரிந்துரை செய்யும் என்றார்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில், டிக்டாக்கால் நமது கலாச்சாரம், பண்பாடு சீர்குலைகிறது என அமைச்சர் மணிகண்டன் கூறியிருக்கிறார். நிஜமாகவே நீங்கள் டிக் டாக்கை தடை செய்துவிடுவீர்களா? இதுபோல் கிட்ரியேட்டிவிட்டியை நீங்கள் முடக்கப்பார்க்கிறீர்களா என சொல்லி ஒரு வீடியோவை பதிவிட்டிருக்கிறார்.