ஜியோவின் டபுள் டேட்டா ஆஃபர்: பட் பெரிய செக்...

Last Updated: வியாழன், 7 பிப்ரவரி 2019 (21:04 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு டபுள் டேட்டா ஆபரை வழங்கியுள்ளது. ஆம், ஜியோ நிறுவனம் சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆஃபரை அறிமுகம் செய்துள்ளது. 
 
புதியதாக சாம்சங் கேலக்ஸி எம் 10 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம் 20 வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபர் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
 
இந்த போன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.198 அல்லது ரூ.299-க்கு ரீசார்ஜ் செய்தால் டபுள் டேட்டா கிடைக்கும். ரூ.198-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவும், ரூ.299-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவும் வழங்கப்பட்டு வந்தது.  
 
தற்போது இந்த ஆஃபர் மூலம் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 4ஜிபி டேட்டாவும், 6 ஜிபி டேட்டாவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :