சோனமுத்தா போச்சா..!! ஏர்டெல்லுக்கு மொத்தமாக ஆப்பு வைத்த ஜியோ!

Last Modified புதன், 6 பிப்ரவரி 2019 (15:16 IST)
இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நுழைந்தது முதல் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள பெரிதும் போராடி வருகின்றனர். 
 
பெரும்பாலானோர், ஜியோவை முதல் சிம் ஆக தேர்வு செய்து  ஏர்டெல், ஐடியா, வோடபோன், பிஎஸ்என்எல் போன்ர மற்ற எண்ட்வொர்க் சிம்களை இரண்டாம் நிலையாக பயன்படுத்தி வருகின்றனர். இதைவிட கொடுமையாக ஏர்டெல் தனது 100 கோடி ரூபார் வருமனத்தையும், 3 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளது. 
 
ஆம், ரயில்வேயில் கடந்த 6 ஆண்டாக ஏர்டெல் நிறுவனம் சேவை வழங்கி வந்தது. தற்போது, ரயில்வேயின் அனைத்து அழைப்புகளை ஜியோ இலவசமாக கொடுத்து, 1.95 லட்சம் வாடிக்கையாளர்களை இழுந்துள்ளது. இதோடு, ரயில்வே ஊழியர்கள் என மொத்தம் 3.78 லட்சம் ஊழியர்களை தங்கள் பக்கம் இழுத்துள்ளது ஜியோ.
 
ரயில்வேயில் மட்டும் ஏர்டெல்லுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி வருமானம் கிடைத்து வந்தது. ஜியோவால் இந்த ரூ.100 கோடி வருமானமும், 3 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்து இடிந்துபோய் உள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :