ரூ.20,000 கோடி: ரிஸ்க் எடுக்கும் வோடபோன் ஐடியா! வீழுமா ஜியோ...?

Last Updated: திங்கள், 11 பிப்ரவரி 2019 (13:58 IST)
இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நுழைந்தது முதல் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள பெரிதும் போராடி வருகின்றனர்.  
 
பெரும்பாலானோர், ஜியோவை முதல் சிம் ஆக தேர்வு செய்து  ஏர்டெல், ஐடியா, வோடபோன், பிஎஸ்என்எல் போன்ற மற்ற நெட்வொர்க் சிம்களை இரண்டாம் நிலையாக பயன்படுத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில் ஜியோவின் நெருக்கடியால் வோடபோன் ஐடியா நிறுவனம் நெட்வொர்க்கை மேம்படுத்த 15 மாதங்களில் ரூ.20,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
இத்தகவலை அந்நிறுவனத்தின் நிதித்துறை மூத்த அதிகாரி அக்சயா மூன்ரா தெரிவித்துள்ளார். மேலும், ஜியோ பல சலுகைகளை வழங்கி மற்ற நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை கொடுப்பதால், இதை சமாளிக்க வோடபோன் ஐடியா இம்முடிவை எடுத்துள்ளதாம். 
 
ரூ.20,000 கோடி முதலீடு மட்டுமின்றி, இத்துடன் தங்களது உரிமை பங்குகளை வெளியிட்டு ரூ. 25,000 கோடியை நிதியாக திரட்டவும் வோடபோன் ஐடியா நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். 


இதில் மேலும் படிக்கவும் :