புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By VM
Last Updated : சனி, 2 பிப்ரவரி 2019 (11:30 IST)

கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யால! அலறவைக்க வரும் ஜியோமியின்

அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் குறைந்த விலையில் மொபைல்களை கொடுப்பது என்றால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் ஜியோமி  நிறுவனத்தை. 


 
குறைந்த விலை போன்களால் ஆப்பிள், சாம்சங் என மற்ற நிறுவனங்களை அலற வைத்து வருகிறது ஜியோமி நிறுவனம். இந்த நிறுவனத்தின் ரெட்மி சீரியஸ் போன்கள் அருமையாக இருப்பதால் வாடிக்கையாளர்கள், ஒவ்வொரு அப்பேட்டையும்  வியப்புடன் வரவேற்பு கொடுத்துவருகிறார்கள். . சமீபத்தில் ரெட்மி 7 செல்போனை  சீனாவில் அறிமுகம் செய்தது ஜியோமி. அங்கு அந்த நிறுவனத்தின் சிஇஒ  Redmi Note 7 Pro  போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தார். இந்த போனில் சோனி ஐஎம்எஸ்86 சென்சாருடன் , 48 மெகா பிக்சல் கேமரா, வசதி இருக்குமாம். 3ஜிபிரேம் 32ஜிபி ஸ்டோரேஜ்,  6 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதி இருக்குமாம். இந்த போனின் விலை ரூ.15,800 ஆக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. . இன்னும் பல வசதிகளை உள்ளடக்கியுள்ள இந்த ஸ்மார்ட்போன் குறித்த பல தகவல்கள் ரகசியமாக வைத்துள்ளார்கள்.  
 
ஜுன் மாதம் ரெட்மி நோட் 7 புரோ வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது என்ன விஷயம் என்பது தெரிந்துவிடும்.