தொடர்புடைய செய்திகள்
- இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரில் விக்கெட் கீப்பர் இவர்தான்!
- மனைவி, மகளுடன் மலையேரும் விராட் கோலி - ஆன்மீக பயணம்!
- இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் புதிய சாதனை
- விராட் கோலி முறியடித்த சச்சின் சாதனை: இந்திய மண்ணில் 21வது ஒரு நாள் கிரிக்கெட் சதம்
- விராத் கோஹ்லி, சுப்மன் கில் சதம்.. இலங்கைக்கு இமாலய இலக்கு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் சவாலானது- ரோஹித் சர்மா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் சவாலாக இருக்குமென்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து, 4 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9 ஆம் தேதி தொடங்குகிறது. டெல்லியில், 2 வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் 21 வரை நடக்கவுள்ளது. அகமதாபாத்தில் 3 வது டெஸ்ட் போட்டி மார்ச் 1 முதல் 5 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.
இதேபோல், ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மார்ச் 17, 19, 22 ஆம் தேதி வரையில் மும்பை, விசாக பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் நடக்க உள்ளது.
இந்த தொடரில் 3 போட்டிகளையாவது வென்றால்தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த டெஸ்ட் தொடர் பற்றி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, இது ஒரு சவாலான தொடர்; 4 டெஸ்ட் போட்டிகள் உள்ள இத்தொடரை நாங்கள் வெல்ல நினைக்கிறோம். இந்திய வீரர்கள் அனைவரும் நல்ல பார்மில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்