வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 6 பிப்ரவரி 2023 (16:44 IST)

இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரில் விக்கெட் கீப்பர் இவர்தான்!

cricket
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக கே.எஸ். பரத் களமிறங்கவுள்ளார்.
 

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து, 4 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில்  விளையாடவுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான  முதல் டெஸ்ட் போட்டி வரும் 9 ஆம் தேதி தொடங்குகிறது.  டெல்லியில், 2 வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் 21 வரை நடக்கவுள்ளது. அகமதாபாத்தில் 3 வது டெஸ்ட் போட்டி மார்ச் 1 முதல்  5 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.

இதேபோல், ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மார்ச் 17, 19, 22 ஆம் தேதி வரையில் மும்பை, விசாக பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் நடக்க  உள்ளது.

இந்த தொடரில் 3 போட்டிகளையாவது வென்றால்தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில்,  நாக்பூரில் உள்ள ஸ்டேடியத்தில், 2 நாட்களாக இந்திய அணி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் பயிற்சியில், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதால், அவருக்குப் பதில்,கே.எஸ். பரத் இடம்பெற்றுள்ளார்.

கே.எஸ்.பரத் இதுவர்டை 86 போட்டிகளில் விளையாடி, 9 சதங்கள், 27 அரை சதங்கள், 4707 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 57.95 வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.