திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 14 ஜனவரி 2023 (09:09 IST)

ஆஸிக்கு எதிரான டெஸ்ட் தொடர்… சூர்யகுமார் யாதவ்வுக்கு வாய்ப்பு

இந்தியாவுக்கு விரைவில் ஆஸி அணி டெஸ்ட் தொடரில் விளையாட வரவுள்ளது.

இந்த தொடருக்கான முதல் 2 போட்டிகளுக்கான அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் காயம் அடைந்த ரிஷப் பண்ட் க்கு பதிலாக இஷான் கிஷான் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்த தொடரில் மூன்று போட்டிகளையாவது வென்றால்தான் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பாரத் (வி.கே.), இஷான் கிஷன் (வி.கே.), ஆர். அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.