1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. R Ashwin Predicts India's Playing XI for First Test Against Sri Lanka

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. ஆர்.அஸ்வின் கணித்த உத்தேச அணி வீரர்கள் பட்டியல்..

இலங்கை டெஸ்ட்
இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் குறித்து ஆர்.அஸ்வின் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். காயமடைந்த சாய் சுதர்சனுக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் 3-வது இடத்திலும், கேப்டன் சுப்மன் கில் 4-வது இடத்திலும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜூரெல் இடம்பெற்றுள்ளனர். சர்ஃபராஸ் கான் அணியில் இடம்பிடித்திருந்தாலும், ஜூரெலுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என ஆர்.அஸ்வின் தெரிவித்துள்ளார்.
 
சுழற்பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோருடன் மணவ் சுதாரும் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியா மூன்று இடது கை சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளது. 
 
வேகப்பந்து வீச்சில் முகமது சிராஜுடன் இணைந்து இளம் வீரர் குர்நூர் பிரார் தனது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவார் என அஷ்வின் கணித்துள்ளார். அனுபவமிக்க பிரசித் கிருஷ்ணாவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
அஷ்வினின் உத்தேச இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், தேவ்தத் படிக்கல், சுப்மன் கில், ரிஷப் பண்ட், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, மணவ் சுதார், குர்நூர் பிரார், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.
 
 
Edited by Siva
About Writer
சிவலிங்கம்
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா.. இனி கிரிக்கெட் அவ்வளவு தானா?