வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 18 ஜனவரி 2023 (18:35 IST)

இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் புதிய சாதனை

subhman gill
இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் புதிய சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

இன்று ஐதரபாத்தில் நடந்து வரும் முதல் ஒரு நாள் தொடரில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 349 ரன் கள் எடுத்து, நியூசிலாந்திற்கு 350 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இப்போட்டியில், முன்னணி வீரர்கள் ரோஹித், கோலி ஆகியோர்  சோபிக்காத நிலையில், இந்திய அணியின் சுப்மன் கில் 149 பந்துகளில் 208 ரன்கள் அடித்து, இந்திய அணியில் ஸ்கோர் உயர காரணமாக இருந்தார்.

ஏற்கனவே இரட்டை சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் 10 வது வீரரானார் சுப்மன் கில்.

சர்வதேச ஒரு நாள் போட்டியில் குறைந்த வயதில் (23) இரட்டை சதம் அடித்த வீரர் ,  இரட்டை அசதம் அடித்த 5 வது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் சுப்மன் கில்.

மேலும், 19 இன்னிங்ஸில் 1000 ரன்கள் அடித்த  முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் படைத்தார் சுப்மன் கில்.