1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Former India Captain Rohit Sharma Set to Host Television Reality Show 'The Rohit Sharma Show'

டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா.. இனி கிரிக்கெட் அவ்வளவு தானா?

ரோகித் சர்மா
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, சோனி என்டர்டெயின்மென்ட் டெலிவிஷன் மூலம் தொலைக்காடியில் களமிறங்க உள்ளார். 'தி ரோகித் சர்மா ஷோ' என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, சோனி லிவ் தளத்திலும் ஒளிபரப்பாகவுள்ளது. 
 
இதுவொரு ரியாலிட்டி நிகழ்ச்சியாகும். இதற்கிடையில், ரோகித்தின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் குறித்தும், 2027 உலக கோப்பைக்கான அவரது வாய்ப்பு குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன. 39 வயதான ரோகித், ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட போதிலும், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து ஆடி வருகிறார். மேலும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
 
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவரது எதிர்காலம் குறித்து பேசப்பட்ட நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 110 பந்துகளில் 138 ரன்கள் விளாசி தனது திறமையை நிரூபித்தார். 
 
இதனிடையே, ரோகித் தொடர்ந்து ஒருநாள் அணியின் ஒரு பகுதியாக இருப்பார் என்று பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே எஸ்.ஸ்ரீசாந்த், நவ்ஜோத் சித்து, வினோத் காம்ப்ளி, சவுரவ் கங்குலி உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
About Writer
சிவலிங்கம்
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல் டெல்லி கேபிடல்ஸ் பிளேயர் கைது.. மருத்துவ மாணவிக்கு பாலியல் வன்கொடுமை?..