1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rajat paditar joined team india for kohli absence

கோலிக்குப் பதில் புஜாராவுக்கு வாய்ப்பில்லை… இளம் வீரர் இந்திய அணியில் தேர்வு!

இங்கிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி விலகி உள்ளார். இந்த தகவலை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோலி அதில் இடம்பெற்றிருந்தார். முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் கோலியின் நான்காவது இடத்தில் களமிறங்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஐந்தாம் இடத்தில் விளையாடும் கே எல் ராகுலை கோலியின் இடத்தில் விளையாட வைக்க பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கோலிக்கு பதிலாக அணியில் சத்தீஷ்வர் புஜாரா தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது மத்திய பிரதேச வீரரான ரஜத் படிதார் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். அவர் சமீபத்தில் நடந்த உள்ளூர் தொடர்களில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து அவருக்கு இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
விசா பிரச்சனையால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்த இங்கிலாந்து வீரர்!