தொடர்புடைய செய்திகள்
- டெஸ்ட்டை டி20 மாதிரி விளையாடுவீங்களா.. நல்லதா போச்சு..! – இங்கிலாந்து வீரர்களுக்கு பும்ரா பதிலடி!
- இங்கிலாந்து டெஸ்ட்டில் கோலிக்கு பதில் அணியில் இணையப் போவது யார்?
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி.! விராட் கோலி விலகல்.! என்ன காரணம்?.
- பவுலர்களை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும்.. ரோஹித் ஷர்மாவுக்கு கவாஸ்கர் அறிவுரை!
- இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்… இங்கிலாந்து அணியில் முக்கிய வீரர் விலகல்!
கோலி இடத்தில் களமிறங்கப் போவது யார்? ராகுல் டிராவிட் எடுத்த முடிவு!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி விலகி உள்ளார். இந்த தகவலை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோலி அதில் இடம்பெற்றிருந்தார். முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் கோலியின் நான்காவது இடத்தில் களமிறங்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஐந்தாம் இடத்தில் விளையாடும் கே எல் ராகுலை கோலியின் இடத்தில் விளையாட வைக்க பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
நான்காவது இடம் என்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமான இடமாகும். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் சாதனைப் படைத்த சச்சின், லாரா, பாண்டிங், கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் நான்காம் இடத்தில்தான் விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.