திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 22 ஜனவரி 2024 (15:57 IST)

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி.! விராட் கோலி விலகல்.! என்ன காரணம்?.

virat kohli
இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி விலகி உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 25ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது.

பிசிசிஐ சார்பில் 2 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இந்திய அணியின் பட்டியலில் ரோஹித் சர்மா, சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், கே.எஸ்.பாரத், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

 
விராட் கோலி விலகல்:
 
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகி உள்ளார்.  இந்த தகவலை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது.