1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 ஜனவரி 2024 (08:37 IST)

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்! ஒரே நாளில் 6 தங்கப்பதக்கங்களை வென்ற தமிழ்நாடு!

Khelo India
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர்கள், வீராங்கனைகள் ஒரே நாளில் 6 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர்.6வது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இந்த ஆண்டு தமிழகத்தில் நடந்து வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரதமர் மோடியால் கடந்த 19ம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட இந்த போட்டிகள் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு நகரங்களில் ஜனவரி 31ம் தேதி வரை நடைபெறுகிறது.

நேற்று போட்டியின் 5வது நாளில் தமிழகம் 5 தங்கப்பதக்கங்களை வென்றது. 110 மீட்டர் தடை ஓட்டம், 400 மீ ஓட்டம், ஸ்குவாஷ், பெண்களுக்கான தனிநபர் சைக்கிளிங் பர்சுயிட் 10 கி.மீ ஸ்க்ராட்ச் மற்றும் யோகாசனம் ஆர்டிஸ்டிக் ஜோடி ஆகிய போட்டிகளில் தமிழக வீரர்கள், வீராங்கனைகள் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளனர்.

நேற்றைய போட்டியின் முடிவில் தமிழ்நாடு மொத்தமாக 12 தங்கம், 3 வெள்ளி, 16 வெண்கல பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும், மகாராஷ்டிரா 14 தங்கம் உட்பட 45 பதக்கங்களுடன் முதல் இடத்திலும் உள்ளது.

Edit by Prasanth.K