ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 23 ஜனவரி 2024 (08:06 IST)

இங்கிலாந்து டெஸ்ட்டில் கோலிக்கு பதில் அணியில் இணையப் போவது யார்?

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி விலகி உள்ளார். இந்த தகவலை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோலி அதில் இடம்பெற்றிருந்தார். முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இப்போது கோலி விலகியுள்ள நிலையில் அவருக்கு பதில் அணியில் யார் சேர்க்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. புஜாரா உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடுகிறார். அதனால் அவர் மீண்டும் அணிக்குள் கொண்டு வரப்படலாம் என தெரிகிறது. அதுபோல சர்பராஸ் கான் சில ஆண்டுகளாகவே ரஞ்சிக் கோப்பையில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் ரஜத் படீடார் மற்றும்அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.