1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Kohli rohith Sharma record breaking captain innings

குறைந்த இன்னிங்ஸ்களிக் 1000 ரன்கள்… கோலியின் சாதனையை முறியடித்த ரோஹித்!

கோலி
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா நேற்று நடந்த டி 20 போட்டியில் 24 ரன்கள் சேர்த்தார்.

இந்திய அணிக்கு அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் ரோஹித் ஷர்மா. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் குணமாகி நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடங்கிய டி 20 போட்டியில் களமிறங்கினார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் கோலியின் சாதனை ஒன்றை முறியடித்தார். இந்திய அணியின் கேப்டனாக கோலி முதல் 30 டி 20 போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்து சாதனைப் படைத்தார். இப்போது ரோஹ்த் ஷர்மா 29 இன்னிங்ஸ்களில் அந்த சாதனையை முறியடித்துள்ளார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸாம் 24 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பிரபல வீராங்கனை தோல்வி!