வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 6 ஜூலை 2022 (10:28 IST)

“நான் பயிற்சியாளர் ஆகி இருக்கக் கூடாது… என்ன விட டிராவிட்..” ரவி சாஸ்திரி ஓபன் டாக்

முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தான் பயிற்சியாளரானது எதிர்பாராமல் நடந்த ஒன்று எனக் கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தொடர்ந்து தனது பதவிகால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர் தான் பயிற்சியாளர் ஆகி இருக்கக் கூடாது என்றும் தான் வெறும் ஒரு வர்ணனையாளர் என்றும் கூறியுள்ளார்.

அந்த நேர்காணலில் “நான் கோச் ஆனது ஒரு எதிர்பாராத நிகழ்வு. என்னை அழைத்தார்கள். நான் என்னால் முடிந்ததைக் கொஞ்சம் செய்தேன். அவ்வளவுதான். எனக்குப் பிறகு இந்திய அணிக்கு பயிற்சியாளராக டிராவிட்டை விட பொருத்தமான நபர் இருக்கமுடியாது. அவர் இந்த கிரிக்கெட் அமைப்பின் மூலம் உருவாகி வந்தவர்.” எனக் கூறியுள்ளார்.