1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 6 ஜூலை 2022 (15:32 IST)

ஐசிசி டெஸ்ட் தரவரிசை… பல வருடங்களுக்குப் பிறகு டாப் 10 –ல் இருந்து வெளியேறிய கோலி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஐசிசி தரவரிசை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதற்கான அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. இதையடுத்து நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்த போட்டிக்குப் பிறகு ஐசிசி தரவரிசை அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விராட் கோலி முதல் 10 இடங்களை விட்டு வெளியேறி 13 ஆவது இடத்துக்கு சென்றுள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் டாப் 10 இல் இருந்து வெளியேறுகிறார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்  5 ஆவது இடத்தில் இருக்கிறார். இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்தில் உள்ளார்.