திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 6 ஜூலை 2022 (15:07 IST)

“கேப்டன்சியில் பூம்ரா சொதப்பிவிட்டார்…” இங்கிலாந்து முன்னாள் வீரர் கடுமையான விமர்சனம்!

நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதற்கான அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. இதையடுத்து நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா கொரோனா காரணமாக விளையாடததால் பும்ரா கேப்டனாக செயல்பட்டார்.

இந்நிலையில் தோல்விக்குப் பிறகு பூம்ரா செய்த மோசமான தவறுகள் குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர், “பூம்ரா தொடர்ந்து ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளை வீசினார். ஆனால் அதற்கு பயன் ஏதும் இருக்கவில்லை. பேட்ஸ்மேன்கள் கணித்து விளையாடினர். அதே போல பூம்ராவின் பீல்ட் செட் அப்பும் மிகவும் மோசமாக இருந்தது.” எனக் கூறியுள்ளார்.