தொடர்புடைய செய்திகள்
- நான் கோப்பையை வென்று அதைக் கோலிக்காக சமர்ப்பிக்க வேண்டும்… இளம் வீரரின் ஆசை!
- ‘இந்த இளைஞன், நம்மை அதிக நாட்கள் வழிநடத்தப் போகிறார்’- ரஜத் படிதாரை உச்சிமுகர்ந்த விராட் கோலி!
- கோலி சார் இந்தாங்க உங்க கப்..! புண்படுத்துறீங்களே! - வைரலாகும் ஐபிஎல் விளம்பரம்!
- என் ஆலோசனைகளுக்கு தோனியின் ரியாக்ஷன் இதுதான்… விராட் கோலி பகிர்ந்த தகவல்!
- கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்கப் போகிறாரா விராட் கோலி? - அவரே கொடுத்த அப்டேட்!
அவர் இருப்பதால் கோலி அழுத்தமில்லாமல் விளையாடலாம்- டிவில்லியர்ஸ் கருத்து!
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.
ஆனாலும் அந்த அணிக்கு சென்னை, மும்பை போன்ற பல முறைக் கோப்பை வென்ற அணிகளுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இந்த சீசனுக்கு புதிய கேப்டன் அந்த அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி மீண்டும் கேப்டனாக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஆர் சி பி அணிக்குப் புதிய இளம் வீரர்கள் எடுகப்பட்டுள்ளனர். அதில் ஒருவராக இங்கிலாந்து அணியின் பில் சால்ட் இணைந்துள்ளார். அவர் அதிரடியாக விளையாடுவதால் கோலி எந்த அழுத்தமும் இல்லாமல் ஸ்ட்ரைக் ரேட்டை அதிகமாக்கும் வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல் விளையாடலாம் என முன்னாள் ஆர் சி பி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்