என் ஆலோசனைகளுக்கு தோனியின் ரியாக்ஷன் இதுதான்… விராட் கோலி பகிர்ந்த தகவல்!
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலிக்கு மோசமான ஆண்டுகளாக அமைந்து வருகின்றன. அதிலும் கோலி போன்ற ஒருவர், ரன் மெஷினாக உலகக் கிரிக்கெட்டைக் கலக்கிய ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக தடுமாறி வருவது மிகவும் கவலையளிப்பதாக இருந்தது.
இந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடி சதம் அடித்து தான் இன்னமும் ரன் மெஷின்தான்” என்பதை நிரூபித்தார். இந்திய அணி இந்த தொடரை வெல்ல முக்கியக் காரணமாக கோலி இருந்தார்.
இதையடுத்து தற்போது ஐபிஎல் தொடருக்காகத் தயாராகி வருகிறார். ஆர் சி பி அணியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் தான் துணைக் கேப்டனாக இருந்த போது தோனியின் தலைமைப் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் துணைக் கேப்டனாக இருந்த போது அவரிடம் சென்று, பீல்டர்களை எங்கே நிறுத்தலாம், விக்கெட்களை எப்படி எடுக்கலாம் என ஆலோசனைக் கூறினால், அனைத்தையும் கேட்டுவிட்டு இது என்ன பைத்தியக்காரத்தனமாக உள்ளது என்பது போல ஒரு ரியாக்ஷன் கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்” எனக் கூறியுள்ளார்.