இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் 22ம் தேதி தொடங்க உள்ள நிலையில் விராட் கோலியை வைத்து செய்துள்ள விளம்பரம் வைரலாகியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 18வது சீசன் இந்த மாதம் 22ம் தேதி தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய காலம் தொட்டு இருந்து வரும் பழமையான அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். அதன் ஆரம்ப காலங்கள் முதல் சில வருடங்கள் முன்பு வரை விராட் கோலிதான் கேப்டனாக இருந்து வந்தார்.
ஆனால் என்ன காலமோ இதுவரை ஆர்சிபி அணி ஒருமுறை கூட கோப்பை வெல்லவில்லை. ஆர்சிபி ரசிகர்களும் ஒவ்வொரு சீசனிலும் ஈ சாலா கப் நமதே என ஆர்வமாய் வருவதும் சோகமாய் திரும்புவதுமாய் இருந்து வருகின்றனர். ஆனால் இந்த சீசனில் ஆர்சிபி வெல்வது உறுதி என அடித்துச் சொல்கின்றனர் ஆர்சிபியினர். காரணம் கோலியின் லக்கி நம்பரான 18
ஐபிஎல் தொடங்கி 18வது சீசன் இது என்பதுடன், ஆர்சிபி அணிக்கும் இது 18வது ஐபிஎல் போட்டி. அதனால் இந்த முறை விராட் கோலிக்காக ஆர்சிபி நிச்சயம் கப் அடிக்கும் என்ற நம்பிக்கை உள்ள நிலையில் அதை விளம்பரமாகவே செய்து விட்டார்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.
அந்த விளம்பரத்தில் கோலி ஒரு ரெஸ்டாரண்டுக்கு செல்கிறார். அங்கு 18ம் நம்பர் டேபிளில் அமர்கிறார். ஸ்பெஷல் டிஸ் நம்பர் 18, ஆர்டர் நம்பர் 18 என ஒரே 18ம் நம்பராக வருகிறது. இந்தாங்க சார் உங்க கப் என டீ கப்பை நீட்டுகிறார் சர்வர், அதிலும் 18. இவ்வாறாக நகைச்சுவையாக செய்யப்பட்டிருந்தாலும் அந்த விளம்பரத்தை ஷேர் செய்து வரும் ஆர்சிபி ரசிகர்கள் இந்த முறை ஈ சாலா கப் நமதே என கூறி வருகின்றனர்.
அதேசமயம் இந்தாங்க சார் உங்க கப் என சர்வர் டீ கப்பை நீட்டியதை வைத்து மற்ற அணி ரசிகர்கள் கொஞ்சம் கிண்டல் கேலியும் செய்து வருகின்றனர்.
Edit by Prasanth.K