1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rajat paditar will lead you long time kohli comment

‘இந்த இளைஞன், நம்மை அதிக நாட்கள் வழிநடத்தப் போகிறார்’- ரஜத் படிதாரை உச்சிமுகர்ந்த விராட் கோலி!

ஆர் சி பி
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

ஆனாலும் அந்த அணிக்கு சென்னை, மும்பை போன்ற பல முறைக் கோப்பை வென்ற அணிகளுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இந்த சீசனுக்கு புதிய கேப்டன் அந்த அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி மீண்டும் கேப்டனாக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் இந்த முறையாவது ஆர் சி பி அணிக் கோப்பையை வெல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் படிதார் பற்றிப் பேசிய விராட் கோலி “அடுத்து வரும் இந்த இளைஞன் நம்மை வெகுநாட்கள் தலைமேற்று வழிநடத்தவுள்ளார். அதனால் அவருக்கு எவ்வளவு அன்பைக் கொடுக்க முடியுமோ அதை நாம் கொடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth