ஞாயிறு, 16 மார்ச் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 16 மார்ச் 2025 (11:28 IST)

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்கப் போகிறாரா விராட் கோலி? - அவரே கொடுத்த அப்டேட்!

இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி ஓய்வு பெறப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் அதுகுறித்து அவரே பேசியுள்ளார்.

 

இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக திகழும் வீரர்களில் ஒருவர் விராட் கோலி. இந்தியா தாண்டியும் உலகளவில் ரசிகர்களை கொண்டுள்ள விராட் கோலி சமீபமாக சில போட்டிகளில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நடந்து முடிந்த சாம்பியன்ஸ் ட்ராபியில் சொற்ப ரன்களில் அவுட் ஆனார். இதனால் அவர் விரைவில் தனது ஓய்வை அறிவிக்க உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

 

இந்நிலையில் இதுகுறித்து ஆர்சிபி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விராட் கோலி “யாரும் பதற்றமடைய வேண்டாம். நான் எதுவும் அறிவிக்க போவதில்லை. போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் இருக்கும் வரை ஓய்வு குறித்த கேள்விக்கு பதிலை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. கிரிக்கெட் விளையாடுவதை நான் இன்னும் நேசிக்கிறேன். முழு மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் அனுபவித்து விளையாடி வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K