1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Vaibhav Sooryavanshi Shines as India Beats Zimbabwe by Seven Wickets in 1st T20I

ஜிம்பாவேவுக்கு எதிரான முதல் டி20.. வைபவ் சூர்யவன்ஷி அதிரடியால் இந்தியா அபார வெற்றி...

இந்தியா ஜிம்பாப்வே
ஹராரேயில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. 
 
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியை இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக கட்டுப்படுத்தினர். மயங்க் யாதவ் மற்றும் பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த, ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வெஸ்லி மாதேவெரே 39 ரன்கள் சேர்த்தார்.
 
126 என்ற எளிய இலக்கை நோக்கித் துரத்திய இந்திய அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 18 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்திய அவர், 4 பவுண்டரிகளையும் பல சிக்சர்களையும் பறக்கவிட்டு ஆட்டமிழந்தார். 
 
இவரின் அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணி எளிதில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஸ்பெயின் வீரர் போட்ட ஒரே ஒரு கோல்.. ஆபாச நடிகை மியா கலீஃபாவுக்கு ரூ. 6.27 கோடி லாபம்..