1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Dinesh karthik match winning innings against RR

அஸ்வின் போட்ட ஒரே ஓவரில் மேட்ச்சை மாற்றிய தினேஷ் கார்த்திக்… மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்!

IPL 2022
நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஆர் சி பி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார் தினேஷ் கார்த்திக்.

நேற்றைய ஐபிஎல் போட்டி கடைசி வரை விறுவிறுப்பாக சென்று ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான போட்டியாக அமைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து,பெங்களுர் அணிக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.  

இதையடுத்து களமிறங்கிய ஆர் சி பி அணி ஒரு கட்டத்தில் 70 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இந்நிலையில் 6 ஆவது வீரராக இறங்கிய தினேஷ் கார்த்திக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி ஓவரில் வெற்றியைத் தேடித்தந்தார். தேவைப்படும் ரன்ரேட் அதிகமாகிக் கொண்டே சென்ற போது அஸ்வின் வீசிய ஒரே ஓவரில் 21 ரன்களை விளாசி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார் டி கே. அதன் பின்னர்தான் போட்டி ஆர் சி பி வசம் வந்ததது. தினேஷ் கார்த்திக் தன்னுடைய அதிரடி இன்னிங்ஸில் 23 பந்துகளில் 44 ரன்களை சேர்த்தார். அதில் 7 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடக்கம்.
 
அடுத்த கட்டுரையில்
நடராஜனை நாங்க உலகக்கோப்பையில் ரொம்பவே மிஸ் பண்ணோம்… ரவி சாஸ்திரி சொன்ன செம்ம மேட்டர்!