திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 2 ஏப்ரல் 2022 (23:56 IST)

ஐபிஎல் 2022-; டெல்லியை பந்தாடிய குஜராத் டைட்டன்ஸ்... அட்டகாசமான வெற்றி!

15 வது ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்தொடரில்  இன்று  எதிராக டெல்லி அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வெற்றி பெற்றுள்ளது. 

இ ந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பாண்ட்  முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

புதிய அணியாக குஜராத் டைட்டன்ஸ் இன்று டெல்லியில் பந்துவீச்சியை சமாளிக்குமா என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துள்ளனர்.

இதில் கில் 84 ரன்களும்,  விஜய் சங்கர் 13 ரன்களும்,   ஹர்த்திக் பாண்டியா 31 ரன்களும, மில்லர் 20 ரன்களும், டிவெடா 14 ரன்களும் அடித்துள்ளனர்.

எனவே குஜராத் அனி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் அடித்து, டெல்லி அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயித்தனர்.

இதையடுத்துக் களமிறங்கிய டெல்லி அணியில் பிரித்வி 10 ரன்களும்,   மன் தீப் சிங் 18 ரன்களும்,    ரிஷப் பந்த் 43 ரன்களும்,   , யாதவ் 25 ரன்களும்,   , பவல் 20 ரன்களும்,    குல்தீப் யாதவ் 14 ரன்களும்,    அடித்து,  20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 157 ரங்கள் மட்டுமே சேர்த்தனர். எனவே குஜராத் அணி  14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.