1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

ஐபிஎல் 14வது போட்டி: இன்று மும்பைக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

MI vs KKR
ஐபிஎல் 14வது போட்டி: இன்று மும்பைக்கு முதல் வெற்றி கிடைக்குமா?
ஐபிஎல் தொடரில் இன்று மும்பை அணியும் கொல்கத்தா அணியுடன் மோத இருக்கும் நிலையில் மும்பை அணிக்கு முதல் வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு இடங்களை பெற்ற சென்னை மற்றும் மும்பை அணி இதுவரை ஒரு வெற்றியை கூட பெறாமல் உள்ளது 
 
இந்த நிலையில் இன்று மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மும்பை அணி வென்றால் மட்டுமே முதல் வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் ஏற்கனவே மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்றுள்ள கொல்கத்தா அணி இன்றைய போட்டியில் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கொல்கத்தா அணியின் கேப்டன் வெங்கடேச ஐயர் ஆகியோர்களில் இன்று வெற்றியை ருசிப்பது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்