வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (10:11 IST)

9 ஐபிஎல் கோப்பையை வென்ற இரு அணிகள்… இந்த சீசனில் சொதப்பல்!

ஐபிஎல் தொடரின் பலமிக்க அணிகளாகப் பார்க்கப்படும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் இந்த சீசனில் மோசமாக தோல்வியை சந்தித்து வருகின்றன.

ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டு இதுவரை நடந்து முடிந்த 14 சீசன்களில் 9 கோப்பைகளை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகள் மட்டுமே வென்றுள்ளன. ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்திய இரு அணிகளாக அவை இருந்து வருகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ்….

தோனி தலைமையில் அதிகமுறை பைனலுக்கு சென்ற அணியாக இருந்த சிஎஸ்கே அணி 4 முறைக் கோப்பையை வென்ற அணியாக உள்ளது சி எஸ் கே. இந்த சீசனின் நடப்பு சாம்பியனாக இருக்கும் சி எஸ் கே வுக்கு புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து விளையாடிய மூன்று போட்டிகளையும் இழந்து புள்ளிப்பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ்

சி எஸ் கே போலவே பலமிக்க அணியான மும்பை இந்தியன்ஸ் ஏலத்தில் பல மாறுதல்களை மேற்கொண்டது. அதையடுத்து தற்போது இந்த சீசனில் ஆடிய இரண்டு போட்டிகளையும் இழந்துள்ளது. புள்ளிப் பட்டியலில் 8 ஆவது இடத்தில் உள்ளது.