1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
  4. Netizens troll adipurush for its worst animation effects

’எப்பா.. பொம்ம படம்ப்பா இது..?’ – ட்ரோல் மெட்டீரியல் ஆன ஆதிபுருஷ்!

adipurush
பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில் ரசிகர்களிடையே இந்த டீசர் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள இதிகாச படம் ஆதிபுருஷ். இதில் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார். இந்தி நடிகர் சயிப் அலிகான் ராவணனாக நடித்துள்ளார். இந்த படத்தை தன்ஹாஜி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஓம் ராவத் இயக்கியுள்ளார்.

இந்த படம் பேன் இந்தியா படமாக இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் டீசர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. படம் முழுவதும் மோஷன் கேப்சரிங் முறையை பயன்படுத்தி அனிமேசன் படமாக எடுக்கப்பட்டுள்ளது.


ஆனால் இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை அனிமேஷன் படமாக எடுக்காமல் லைவ் ஆக்‌ஷனாக எடுத்திருக்கலாம் என்ற எண்ணத்தை பலர் பதிவு செய்துள்ளனர். இந்த படத்தின் அனிமேஷன் தரம் ஈர்க்கும் வகையில் இல்லை என கூறியுள்ள ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #DisappointingAdipurish என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடித்த சாகோ, ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்கள் போதிய வரவேற்பை பெறாத நிலையில் தற்போது ஆதிபுருஷ் படமும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. இந்த படம் ஜனவரி 12ம் தேதி வெளியாக உள்ளது.

Edited By: Prasanth.K
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பொன்னியின் செல்வன் ரிலீஸூக்கு பிறகு ட்ரோல் ஆகும் கீர்த்தி சுரேஷ்… என்ன காரணம்?