திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (14:57 IST)

இருவரின் படங்களும் ஒரே பட்ஜெட்; சம்பளத்தில் அல்லு அர்ஜூனை விட பிரபாஸ்தான் உச்சம்!

allu arjun
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களான பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜூன்  இருவரும் ஒரே பட்ஜெட் படங்களில் நடித்து வந்தாலும், இருவரின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் பிரபாஸ். இவர் பாகுபலி படத்திற்குப் பின் இவரது புகழ உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.

பாகுபலி படத்திற்குப் பின் ஷாலோ படத்தில் நடிக்க பிரபாஸ் 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார்.தற்போது நடித்து வரும்  சலார் படத்திற்கும் அதே அளவு சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் பட்ஜெட் ரூ.500 ஆகும்.
பிரபாஸ்
பிரபாஸ்

அதேபோல், இந்தி பிரபலங்களுடன் இணைந்து பிரபாஸ் நடித்து வரும் பான் இந்தியா படம் ஆதிபுரூஸ். இப்படத்தின் பட்ஜெட் 500 கோடிரூபாய், இதில், பிரபாஸின் சம்பளம்  150 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.

தெலுங்கு சினிமாவில் ஸ்டைலிஸ் ஸ்டார் அல்லு அர்ஜூன்  நடிப்பில் கடந்தாண்டு வெளியான புஷ்பா ரூ.350 கோடி வசூலானது. தற்போது இதன் புஷ்பா-2 படத்தின் பட்ஜெட் 500 கோடி ரூபாய் என்றாலும் அவரது சம்பளம் ரூ.50 கோடி எனக் கூறப்படுகிறது.