வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (17:51 IST)

பிரபாஸின் ‘’புராஜெக்ட் கே-ல் இணையும் தென்னிந்திய ஸ்டார்கள்!

பிரபாஸ்
பிரபாஸின் ‘’புராஜெக்ட் கே ‘’என்ற படத்தில் தென்னிந்திய நடிகர்கள் சில இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் பிரபாஸ். பாகுபலி1-2 ஆகிய படங்களுக்குப் பின் இவரது மார்க்கெட் உயர்ந்தது, இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார்.

தற்போது, கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல்ஸ் இயக்கத்தில்,சலார் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில்,பிரபாஸின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, மகா நடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கி வரும் ‘புராஜெக்ட் கே ‘ படத்தின் ஹீரோவாக பிரபாஸும் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனும்   நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தில் பிரபாஸ்- தீபிகாவுடன் இணைது அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்டோர்    நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் ஷூட்டிங்க 2021 ஜூலையில் ஆரம்பமானது தற்போது ஷூட்டிங்க் நடந்து வரும் நிலையில் இப்படம் 2023 ல் தான் முடியும் எனவும், வரும் 2024 ல் இப்படம் ரிலீஸாகும் என்றும், இப்படம் இந்தியாவில் 10 மொகளிலும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில்,  ஏற்கனவே இப்படத்தில் இந்தி நடிகர்கள் தீபிகா படுகோனேவும், அமிதாப்பச்சனும் நடிக்கும் நிலையில், தென்னிந்திய நடிகர்கள் சில இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

 இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் , துல்கர் சல்மான்( மலையாளம்),  சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு( தெலுங்கு) , சூர்யா( தமிழ்) ஆகியோர் நடிக்கவுள்ளதாகத்தகவல் வெளியாகிறதது.   பாகுபலிக்குப் பின் இப்படத்தையும் பான் இந்திய அளவில் ஹிட் ஆக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.