திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 12 செப்டம்பர் 2022 (19:36 IST)

சல்மான் கான், பிரபாஸ் ஆகிய இருவரின் படங்களின் டீசரும் தீபாவளிக்கு ரிலீஸ்!

பாலிவிட்டில் முன்னணி நடிகர்களான பிரபாஸ் மற்றும் சல்மானின் படங்களின் டீசர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில்  உருவாகிவரும் படம் ஆதி புரூஸ். இப்படத்தை ஒம் ராவன் இயக்கி வருகிறார்.ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகிவரும் படமான ஆதி புரஸில்  , ராமனாக பிரபாஸும், கீர்த்தி சனோன் சீதை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் .  சாயிப் அலிகான் ராவணன் வேடத்தில் நடிக்கிறார்.

 
ரூ.500 கோடி பட்ஜெடில் உருவாகியுள்ள இப்படம்   விரைவில் வெளியாகும் எனக் கூறப்பட்டுகிறது. இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.

இப்படத்தின் அட்டேட்டை ரசிகர்கள் கேட்டிருந்த நிலையில், ஆதிருபூஸின் டீஸர் வரும் தீபாவளிகும் ரிலீஸாகும் எனத் தகவல் வெளியாகிறது.  இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸாகிறது.

 


மேலும், சூப்பர் ஸ்டார் சல்மான் – பூஜா ஹெக்டே- வெங்கடேஸ், ஜெகபதி நடிப்பில் , ஃபர்ஹாட் சாம்ஜி இயக்கத்தில், தேவி ஸ்ரீபிரசாத் இசையில் உருவாகி வரும் #KisiKaBhaiKisiKiJaan        

படத்தின் டீசரும் தீபாவளிக்கு ரிலீஸாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெளியான பாலிவுட் முன்னணி நடிகர்களின் படங்கள் தோல்வியுற்ற நிலையில், இப்படம் அனைவராலும் வெற்றி பெரும் என நம்பப்படுகிறது.