1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. katta kusthi 2 movie collection for ten days

50 கோடி வசூலை நெருங்கும் கட்டா குஸ்தி 2!. விஷ்ணு விஷால் சொன்னது நடக்குமா?!..

gatta kusthi2
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி முக்கிய வேடத்தில் நடித்து 2022ம் வருடம் வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி. செல்லா அய்யாவு இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.  இந்த திரைப்படம் ரசிகர்ளிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது நான்கு வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த படத்திலும் ஹீரோவாக விஷ்ணு விஷாலும், கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்தை போலவே கட்டா குஸ்தி என்கிற விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பற்றி நல்ல வசூலை பெற்று வருகிறது..

கடந்த 3ம்ம் தேதி இந்த படம் வெளியானது. தற்போது படம் வெளியாகி 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த படம் 50 கோடி வசூலை நெருங்கிவிட்டது. நேற்று வரை இப்படம் 44 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமும், விஷ்ணு விஷாலும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். எனவே விரைவில் படம் 50 கோடி வசூலை தாண்டும் என தெரிகிறது.

இந்த படம் வெளியான சில நாட்களில் செய்தியாளர்களிடம் பேசிய விஷ்ணு விஷால் ‘இந்த படம் 100 கோடி வசூலித்தால் சந்தோஷம்.. ஆனால் 50 கோடியை தாண்டும் என நினைக்கிறேன்’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது..
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
அப்பாவுடன் மோத விரும்பாத ஜேசன் சஞ்சய்.. ‘ஜனநாயகன்’ ரிலீஸால் தள்ளி போகும் ‘சிக்மா’