1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. jailer 2 audio launch may happen in malaysia

மலேசியாவில் நடக்கிறதா ஜெயிலர் 2 ஆடியோ லான்ச்!.. வெளியான அப்டேட்..

jailer2
நெல்சன் இயக்கத்தின் ரஜினி நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. ஏற்கனவே வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் சிவ்ராஜ்குமார், மோகன்லால் ஆகியோர் கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

அவர்கள் மட்டுமில்லாமால் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் ஆகியோரும் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், மலேசியாவை சேர்ந்த மாலிக் ஸ்ட்ரீம்ச் குழும நிறுவனர் அப்துல் மாலிக் ரஜினியை சந்தித்த புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து ‘மலேசியா ரெடியா?’ என்ன பதிவிட்டிருக்கிறார்.

இதையடுத்து, ஜெயிலர் 2 படத்தின் ஆடியோ லான்ச் மலேசியாவில் நடக்க வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏற்கான்வே விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்தபோது இந்த அப்துல் மாலிக்தான் அதற்கான ஏற்பாடுகளை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
கட்டா குஸ்தி 2 செம்ம படம்!.. விஷ்ணு விஷாலுக்கு போன் போட்டு வாழ்த்திய ரஜினி...