1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. rajinikanth appreciated gatta kusthi 2 movie

கட்டா குஸ்தி 2 செம்ம படம்!.. விஷ்ணு விஷாலுக்கு போன் போட்டு வாழ்த்திய ரஜினி...

gatta kusthi2
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து 2022ம் வருடம் வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி. இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலையும் பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது. கடந்த 3ம் தேதி கட்டா குஸ்தி 2 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.

முதலில் இந்த படத்திற்கு பாஸ்டிவான விமர்சனங்கள் வர துவங்கியது. இதையடுத்து குடும்பத்தோடு பலரும் தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்தார்கள். நேற்று வரை இந்த திரைப்படம் 44 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில்தான், இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஷ்ணு விஷலை போனில் தொடர்பு கொண்டு பாராட்டி பேசியிருக்கிறார்.

 ‘செம படம்.. ரொம்ப ஜாலியான பொழுதுபோக்கு படம்.. இந்த மாதிரி படம் இப்ப வர்றதில்லை.. எல்லாரும் நல்லா நடிச்சிருக்கீங்க.. குட்டி சாரா பாப்பா ரொம்ப அற்புதமான நடிச்சிருக்காங்க... உங்களுக்கு நல்ல ஸ்கிரிப்ட் சென்ஸ் இருக்கு.. நல்ல படம் நிறைய கொடுங்க’ என சூப்பர் ஸ்டார் தன்னை வாழ்த்தியதாக மிகவும் மகிழ்ச்சியுடன் விஷ்ணு விஷால் பதிவிட்டிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
ஜிவி பிரகாஷ் போதும்!.. இனிமே சாய் அபயங்கர்!.. தனுஷ் எடுத்த முடிவு..