1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. actress kayadu lohar may act in ajith next movie

அஜித் படத்தில் கயாடு லோஹர்!.. புரட்யூசர் மட்டும் கன்பார்ம் ஆகலயாம்!. குழப்பமா இருக்கே..

kayadu lohar
குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின் அஜித்தின் புதிய படம் இப்போதுவரை துவங்கப்படவில்லை. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் என்பது மட்டும் உறுதியானது. ஆனால் அஜித் 185 கோடி சம்பளம் கேட்டதால் இந்த படத்தை தயாரிக்க இதுவரை தயாரிப்பாளர் யாரும் முன் வரவில்லை.

பல தயாரிப்பாளர்களிடம் அணுகி, பல மாதங்களாக அலைந்தும் தயாரிப்பாளர் யாரும் கிடைக்கவில்லை. அஜித்தின் படத்திற்கு உள்ள வியாபாரத்திற்கு அவருக்கு சம்பளமாக 185 கோடி கொடுக்க முடியாது என்பது எல்லோரின் எண்ணமாக இருக்கிறது. ஆனால், அஜித் இதை புரிந்துகொண்டமாதிரி தெரியவில்லை.

ஒருகட்டத்தில் விரக்தியடைந்த ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படம் தாமதம் ஆவதால் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில்  ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியானது. இப்போதுவரை இந்த படத்திற்கு தயாரிப்பாளர் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் அஜித் அந்த சொந்த பணத்தில் இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அட்வான்ஸ் கொடுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறாராம்.  

இந்நிலையில்தான், சமீபத்தில் கயாடு லோஹரிடம் படக்குழு அட்வான்ஸ் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. மேலும், கோவையை சேர்ந்த ஒரு புதிய தயாரிப்பாளரிடமும் பேசி வருவதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
50 கோடி வசூலை நெருங்கும் கட்டா குஸ்தி 2!. விஷ்ணு விஷால் சொன்னது நடக்குமா?!..