1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Cyclone Akwan Changes Course: To Cross Coast Between Narsapur and Puri

திடீரென திசை மாறிய அக்வான் புயல்.. கரையை கடக்கும் இடமாற்றம் குறித்த தகவல்...

cyclones
வங்கக்கடலில் உருவான 'அக்வான்' புயல் தனது பாதையை மாற்றி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
முன்பு நெல்லூர் - விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த புயல், தற்போது நரசப்பூர் மற்றும் புரி இடையே வெள்ளிக்கிழமை  தீவிர புயலாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்தப் புயல், சென்னைக்கு கிழக்கே சுமார் 570 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
 
தொடக்கத்தில் மிக தீவிர புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட அக்வான் புயல், தற்போது தீவிர புயலாகவே கரையை தாண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் நகரும் திசையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால், ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் கடலோர பகுதிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டு வருவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயலின் நகர்வுகளை தொடர்ந்து அவசரகாலக் குழுவினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஸ்மார்ட் கண்ணாடியை பயன்படுத்தி 100க்கு 100 மதிப்பெண்.. தேர்விலும் புகுந்த ஏஐ....