தொடர்புடைய செய்திகள்
- அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு முன்னுரிமை! – ஒருமனதாக ஏற்ற எதிர்கட்சிகள்!
- உயர்சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடுக்கு அனுமதி இல்லை: சென்னை ஐகோர்ட்
- அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு! நாளை மசோதா தாக்கல்!
- மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 % உள் இடஒதுக்கீடு கிடையாது: நீதிமன்றம்
- கொரோனாவால் பெற்றோர்களை இழந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு: எத்தனை சதவிகிதம் தெரியுமா?
தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு - அரசாணை வெளியீடு!
அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவிகளுக்கு கடந்த ஆண்டு மருத்துவ படிப்பு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து 400க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகள் கடந்த ஆண்டு எம்பிபிஎஸ் படிப்புக்கு தேர்வு பெற்றனர் என்பதும் தெரிந்ததே
இதனை அடுத்து பொறியியல் உள்பட தொழில்நுட்ப கல்வியில் படிக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் நடப்பு கல்வி ஆண்டிலேயே அமலுக்கு வரும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் அரசுப்பள்லி மாணவ மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
