1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Opposite parties also sipport Govt school students reservation

அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு முன்னுரிமை! – ஒருமனதாக ஏற்ற எதிர்கட்சிகள்!

Tamilnadu
தமிழக சட்டசபையில் இன்று தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் முன்னதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

மசோதா மீதான விவாதத்தில் இந்த மசோதாவை ஒரு மனதுடன் ஆதரிப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரின் ஆதரவும் உள்ளதால் இன்றே இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஜெர்மனியில் பீட்சா டெலிவரி பாயாக ஆப்கன் முன்னாள் அமைச்சர்!