1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Reservation for government school students! Bill filed tomorrow

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு! நாளை மசோதா தாக்கல்!

இளநிலை தொழிற்கல்வி படிப்பு
அரசுப்  பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 %உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.

அரசுப்  பள்ளி மாணவர்கள் இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் முன்னுரிமையின் அடிப்படையில் உள் ஒதுக்கீடு  வழங்குவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது.

இந்நிலையில் இந்த உள் ஒதுக்கீட்டிற்கான  மசோதா வழிவகை செய்யப்பட்டு, நாளை காலை, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
அடுத்த கட்டுரையில்
கேரளாவில் 31ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!