1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (21:49 IST)

மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 % உள் இடஒதுக்கீடு கிடையாது: நீதிமன்றம்

மருத்துவ கல்லூரி இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று ஏற்கனவே முடிவானது என்பது தெரிந்ததே
 
அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டுமின்றி அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த மாணவர்களும் இந்த சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இது குறித்த வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதிவு செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய உத்தரவை மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் பிறப்பித்துள்ளன.ர் மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வழங்க முடியாது என்று தெரிவித்திருப்பது இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது