Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயை அரெஸ்ட் பண்ணியிருந்தா இது நடந்திருக்குமா?!.. அனிதா ராதாகிருஷ்ணன் ஆதங்கம்!..

Updated: புதன், 8 ஜூலை 2026 (12:49 IST)
தவெக தலைவர் விஜய் கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடி விட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதில் பலரும் சிக்கினார். அதில் 41 பேர் உயிரிழந்தனர். அப்போது விஜய் அங்கிருந்து கிளம்பி திருச்சி விமான நிலையம் வந்து விமானம் மூலம் சென்னை வந்துவிட்டார்.

41 பேர் உயிரிழந்த சம்பத்திற்கு விஜய்தான் காரணம் என திமுகவினர் பேசினார்கள். விஜய் கரூருக்கு தாமதமாக சென்றதே காரணம் என அப்போதைய முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசினார். இது விஜய்க்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதோடு கரூர் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் சாதி இருப்பதாக முதல்வர் விஜயும், ஆதவ் அர்ஜுனா போன்ற தவெக அமைச்சர்களும் நம்புகிறார்கள்..

சில நாட்களுக்கு முன்பு ஒரு விழாவில் பேசிய தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ‘கரூரில் போலீஸ் உதவியுடன் திமுக பொதுமக்களை கொன்று குவித்தது’ என பேசினர். இது திமுகவுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ‘திமுக தலைவர் முக ஸ்டாலின் இளகிய மனதுக்காரர். கரூர் சம்பவத்தின் போது ஜோசப் விஜய் செய்த தவறுக்கு அவரை திருச்சியில் வைத்து கைது செய்திருக்க வேண்டும்.. அப்படி செய்திருந்தால் எல்லாம் சரியாக நடந்திருக்கும்.. அதேபோல் ஆதவ் அர்ஜுனாவையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும். இதை செய்யாமல் எங்கள் தலைவர் பொறுத்துக் கொண்டார்.. அதனால்தான் கரூர் சம்பத்திற்கு போலீஸ்தான் காரணம்.. முட்டாள் முதல்வர்’ என்றெல்லாம் இப்போது பேசுகிறார்கள்.<>

எல்லாம் காட்டு

30 வருஷத்துக்கு முன்னாடி வெறும் சைக்கிள்!.. இப்ப கோடீஸ்வரர்!.. சட்டசபையில் தெறிக்கவிட்ட ஆதவ் அர்ஜுனா!..

4,133 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை.. ஆனால் 19,502 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.. எப்படி?

கர்நாடகத்தில் நடந்தது போலி என்கவுண்டரா? 3 தமிழர்களின் பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்..

கார் முழுவதும் காதலியின் 3400 முத்தம்!... போலீசாரிடம் சிக்கிய வாலிபர்!..

விஜய்க்கும் ஆதவ் அர்ஜூனாவிற்கும் அபராதம் விதிப்பேன்: நீதிபதி கண்டிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments