1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. senthil balaji may comes to police station today

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி!.. செந்தில் பாலாஜி இன்று ஆஜராவாரா?!..

senthil balaji
தவெக ஆட்சியை தவிர்ப்பதற்காக சிலர் தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசியதாக சமீபத்தில் புகார் எழுந்தது. தவெக எம்.எல்.ஏ இளங்கோவிடம் சிலர் 35 கோடி பேரம் பேசியதையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுவரைக்ஜ்கும் இது தொடர்பாக மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் அவர்கள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் என தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரரர் அசோக் ஆகிய இருவரையும் கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கினார்கள். ஆனால் தற்போது அவர்கள் இருவருமே தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து நேற்று முன் தினம் செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் போலீசார் நேரில் சென்று சம்மன் அளித்தனர்.

செந்தில் பாலாஜி சென்னை  திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என அதில்சொல்லப்பட்டிருந்தது. எனவே, இன்று செந்தில் பாலாஜி காவல்நிலையத்தில் ஆஜராவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது..