1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Senior vs Junior Rift Escalates in DMK Over Alleged Plots to Topple Vijay's TVK Government

தவெக ஆட்சியை கவிழ்த்தே தீருவோம்.. சீனியர் திமுக பேச்சை கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறதா ஜூனியர் டீம்?

udhayanidhi
தமிழக அரசியல் களம் தற்போது அடுத்தடுத்து அதிரடித் திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக  ஆட்சியைத் திரைமறைவில் கவிழ்க்க நடக்கும் முயற்சிகள் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளன. 
 
குறிப்பாக, தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சியின் சீனியர் தலைவர்களுக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. கனிமொழி, துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்கள், "புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இந்த ஆட்சிக்கு எதிராக இப்போதே எந்த அதிரடி நடவடிக்கையும் வேண்டாம்; குறைந்தது ஒரு வருடமாவது நாம் அமைதியாகக் காத்திருப்போம்" என்று அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
 
ஆனால், சீனியர்களின் இந்த ஆலோசனையை மதிக்காமல், திமுகவின் ஜூனியர் தலைவர்கள் எப்படியாவது தவெக ஆட்சியை உடனடியாகக் கவிழ்த்தே தீர வேண்டும் என்று மூத்த தலைவர்களுக்குத் தெரியாமல் திரைமறைவு சதிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தன்னிச்சையான செயல்பாடுகள் சீனியர் தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
பொதுவாக ஒரு கட்சிக்குள் இரண்டு முக்கியத் தலைவர்களுக்கு இடையேதான் கோஷ்டி மோதல் ஏற்படும். ஆனால், தற்போது திமுகவில் "சீனியர் vs ஜூனியர்" என இருவேறு கோஷ்டிகள் உருவாகியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூத்த நிர்வாகிகளின் பேச்சைக் கேட்காமல், கட்சியின் இளைஞர் பட்டாளம் தன்னிச்சையாகக் காய்களை நகர்த்துவது அறிவாலய வட்டாரத்தில் தர்மசங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது.
 
Edited by Siva