கரூர் நெரிசல் வழக்கு!.. திமுகவுக்கு மூக்குடைப்பு!.. உச்சநீதிமன்றம் கண்டிப்பு...

செவ்வாய், 7 ஜூலை 2026 (12:33 IST)
முதலமைச்சர் விஜய் வருகிற 10ம் தேதி கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லவிருக்கிறார். அப்போது உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரண நிதி மற்றும் அரசு வேலைகள் ஆகியவற்றை அவர் அறிவிப்பார் என தெரிகிறது. மேலும் அந்த நிகழ்வின்போது கரூரில் என்ன நடந்தது என விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா, சிடி நிர்மல்குமர் போன்ற அமைச்சர்கள் பேச வாய்ப்பிருக்கிறது.

அப்படி பேசினால் அது தங்களுக்கு அது பின்னடைவாக அமையும் என திமுக கருதுகிறது. எனவே, கரூர் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் என் ஆனந்த், சிடி நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பொதுவெளியில் பேசக்கூடாது என நேற்று திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதோடு, இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது.

ஆனால் இந்த வழக்கை ஏற்க உச்சநீதிமன்ற நீதிபதி மறுத்துவிட்டார். ‘நீங்கள் பேச்சு சுதந்திரத்திற்கு தடை கேட்கிறீர்களா?.. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் போது நாங்கள் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?’ என நீதிபதி திமுக தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும் ‘கரூரில் மக்களை சந்திப்பது என்பது முதல்வரின் முடிவு.. அதை தடுக்க முடியாது.. இந்த வழக்கில் முதல்வர் குற்றவாளி கிடையாது.. நீங்கள் இந்த நீதிமன்றத்தை அரசியல் அரங்கமாக மாற்றாதீர்கள்’ என்று நீதிபதி கண்டித்தார். மேலும் ‘இந்த மனுவை நீங்கள் வலியுறுத்தாமல் இருப்பதே உங்களுக்கு நல்லது. நாங்கள் இந்த மனுவை தள்ளுபடி செய்ய விரும்புகிறோம்’ என நீதிபதி சொல்ல திமுக வழக்கறிஞர் அந்த மனுவை வாபஸ் பெறுவதாக ஒப்புக்கொண்டார்.<>

எல்லாம் காட்டு

நாடு முழுவதும் 58 இன்ஜினியரிங் காலேஜை இழுத்து மூடியாச்சி!.. முக்கிய அறிவிப்பு...

உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அரசு இறுதிச்சடங்கு: இந்தியாவுக்கு மட்டும் நன்றி சொன்ன ஈரான்...

குழந்தை இல்லாத தம்பதி.. இறப்பதற்கு முன் மொத்த சொத்தையும் என்ன செய்தார்கள் தெரியுமா?

தலைமறைவான செந்தில் பாலாஜி!. தேடுதல் வேட்டையில் காவல்துறை!.. அடுத்து என்ன?...

இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க விரும்பும் இந்தோனேஷியா.. பிரதமர் மோடி முன் ஒப்பந்தம்...

அடுத்த கட்டுரையில்
Show comments